முள்ளிவாய்க்கால் வாருங்கள்:விக்கினேஸ்வரனும் அழைப்பு!


முள்ளிவாய்க்கால் மண்ணில் எதிர்வரும் 18 ஆம் திகதிநடைபெறும் 10 ஆம் ஆண்டு இனப்படுகொலைநினைவேந்தல் நிகழ்வில் தமிழ் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலிகளை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கும் வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் விக்னேஸ்வரன், தானும் அன்றைய தினம் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில்மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆம் ஆண்டுநினைவேந்தல் நிகழ்வுஎதிர்வரும் 18 ஆம் திகதிமுள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெறும் எனமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு அறிவித்துள்ளது. எந்தவிதமானசுயஅரசியல் நோக்கங்களும் இன்றி இந்தநிகழ்வினை இந்தக் குழு ஏற்பாடு செய்துள்ளமை மகிழ்ச்சி அளிக்கின்றது. அதற்காக அவர்களுக்கு எனது நன்றியைத்தெரிவித்துக்கொள்கின்றேன்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களின் பின்னர் பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக மக்கள் மத்தியில் ஒருவித அச்ச நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது. இருந்த போதிலும் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட எமது உறவுகளுக்கு அஞ்சலிசெலுத்துவதற்கும் அவர்களுக்கான நீதிக்காககுரல் கொடுப்பதற்குமாக முள்ளிவாய்க்காலில் எதிர்வரும் 18 ஆம் திகதிஒன்று கூடுவதற்குநாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம். தமது உறவுகளை இழந்தமக்கள் முள்ளிவாய்க்கால் மண்ணில் கண்ணீர்விட்டுஅழுதுதீபம் ஏற்றிஅஞ்சலிசெய்வதற்குஅவர்களுக்குமுழு உரிமையும் இருக்கின்றது.
உயிர்த்தஞாயிறுதாக்குதல்களின் பின்னர் சர்வதேசசமூகத்தின்  கவனம் தமிழ் மக்களின் பிரச்சினைகளில் இருந்துதிசைதிரும்பியிருக்கின்றநிலையிலும்,அரசாங்கம் தற்போதையசூழ்நிலைகளைஎமக்குஎதிராகப்பல்வேறுவழிகளிலும் பயன்படுத்திவருகின்றநிலையிலும்,எமதுஉரிமைகள் தொடர்பிலும் எமக்குகிடைக்கவேண்டியநீதிதொடர்பிலும் நாம் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கின்றோம் என்பதைஎடுத்துக்காட்டவேண்டியஅவசியம் இன்றுஎமக்கு இருக்கின்றது. 
இந்தநாட்டில் தமிழ் மக்களுக்கு இருக்கின்றபிரச்சினைபல நூற்றாண்டுகளுக்குமுற்பட்டவரலாற்றுடன் தொடர்புபட்டது. நாடுகளுக்கு இடையில் அவ்வப்போதுஏற்படக்கூடியபோர்களும்,சர்வதேசபயங்கரவாதசக்திகளினால் அவ்வப்போதுமேற்கொள்ளப்படும் நாசகாரசெயற்பாடுகளும் தமிழ் மக்களின் சுய நிர்ணயஉரிமைக்கானநீண்டகாலநியாயமானபோராட்டத்தையும் இனப்படுகொலைக்கானநீதிக்கானபோராட்டத்தையும் பாதித்துவிடக்கூடாது. 
இது சம்பந்தமாகபொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டியதேவைசர்வதேசசமூகத்துக்கு இருக்கிறது. இலங்கையில் உள்ளஎல்லா இனங்களுக்கும் மதங்களுக்கும் சட்டம் சமனானதுஎன்பதைஉறுதிப்படுத்தும் வகையிலும் அவர்களின் சுயநிர்ணயஉரிமையினைநிலைநாட்டும் வகையிலும் உச்சபட்சஅதிகாரம் கொண்டசம~;டி கட்டமைப்புஒன்றினைஏற்படுத்துவதே இலங்கையில் நிரந்தரமானஅமைதியைஏற்படுத்தும் என்பதை ஐ.நா மற்றும் சர்வதேசசமூகம் ஆகியவைபுரிந்துகொண்டுஉடனடியாகநடவடிக்கைகளைஎடுக்கவேண்டும். ஒன்பதுமாகாணங்களுக்கும் நிரந்தரசுயாட்சிஉரித்தைவழங்குவதைநாம் வரவேற்கின்றோம். ஆனால் எந்த இரண்டுஅல்லதுஅதற்குமேற்பட்டமாகாணங்களும் இணைந்துசெயற்படமுன்வந்தால் அவ்வாறான இணைப்புக்குச்சட்டத்தில் இடமளிக்கப்படவேண்டும். வடகிழக்கு இணைப்பில் முஸ்லிம் சகோதரர்களுக்குதனியலகொன்றைவழங்கவேண்டும் என்பதேஎமதுகோரிக்கை. இவற்றைஅரசாங்கமும் எதிர்க்கட்சியினரும் சர்வதேசசமூகமும் கவனத்திற்குஎடுக்கவேண்டும்.   
ஆகவே இவ்வருடமுள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வினைமிகவும் அமைதியானமுறையிலும் நாட்டின் சட்டதிட்டங்களுக்குஅமைவாகவும்இனப்படுகொலைநிகழ்த்தப்பட்டமுள்ளிவாய்க்கால் மண்ணில் நின்றுநாம் அஞ்சலிசெலுத்திநடத்துவதுஅவசியமாகியுள்ளது. அத்துடன் சர்வதேசசமூகத்துக்குஎமதுசெய்தியினைக் கூறுவதும் இந்தச்சமயத்தில் அவசியமாகியுள்ளது.எனவேதான் சர்வதேசசமூகத்தின் கடப்பாடுபற்றி இங்குநாம் குறிப்பிட்டிருந்தோம்.
கடந்தகாலங்களைப்போலமாணவர்கள் இந்தநிகழ்வில் கலந்துகொண்டுஉரிமைகள் மற்றும் நீதிஆகியவைதொடர்பில் தமதுஉறுதியானநிலைப்பாடுகளைவெளிப்படுத்துவதுஅவசியமாகின்றது. அன்றையதினம் நானும் தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர்களும் முள்ளிவாய்க்காலில் நடைபெறும் நினைவு கூரல் நிகழ்வில் கலந்துகொள்ளவிருக்கின்றோமென தமிழ் மக்கள் கூட்டணி அறிவித்துள்ளது.

No comments