கூகுள் செயலி களஞ்சியத்தில் இருந்து டிக் டாக் நீக்கம்!

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த 3-ம் தேதி அன்று டிக் டாக் செயலிக்குத் தடை விதிக்க கோரி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  மனுவை விசாரித்த நீதிமன்றம் உயர்நீதிமன்றம்  இதில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியது நீதிமன்றம்.

இதை அடுத்து, ‘டிக் டாக்’ கைபேசி  செயலி மூலம் எடுக்கப்பட்ட வீடியோக்களை தொலைகாட்சிகளில் வெளியிட மத்திய அரசு தடை விதித்து. அதை தொடர்ந்து, கூகுள் செயலி களஞ்சியத்தில் இருந்தும் மற்றைய செயலி களஞ்சியங்களில்  இருந்தும்  டிக் டாக் செயலியை நீக்குமாறு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவு, மத்திய அரசின் கோரிக்கைகளை ஏற்று கூகுள் செயலி களஞ்சியத்தில் இருந்து  ‘டிக் டாக்’ செயலி  அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.

No comments