சிற்றூந்து விபத்து! 10 பேர் காயம்!

நுவரெலிய - வடவல பிரதேசத்தில் சிற்றுந்து ஒன்று 10 அடி பள்ளத்தில் வீழ்ந்து 10 பேர் காயமடைந்துள்ளனர்.

காலியிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த சிற்றுந்தே இன்று அதிகாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

காயமடைந்தவர்கள் வடவல பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அனுமதிக்கப்பட்டவரகளில் இருவர் மேலதிக சிகிற்சைக்காக நாவலப்பிடிய மருத்துவமனையிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

No comments