EPRLF பிராந்திய மாநாடு:முன்னாள் முதலமைச்சர் வருகை


ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் யாழ்ப்பாணம் மாற்றும் கிளிநொச்சி மாவட்ட பிராந்திய மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

கட்சியின் அரசியல் பீட உறுப்பினர் கலாபூசணம் க.அருந்தவராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார்.

ஈழ விடுதலை போராட்டத்தில் உயிரிழந்த அனைத்து போராளிகள் மற்றும் பொது மக்களுக்கான அஞ்சலியுடன் மங்கள விளக்கேற்றி தமிழ்த் தாய் வாழ்த்துக்களுடன்இம்மாநாடு ஆரம்பிக்கப்பட்டது.

மேலும் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் பிரேமச் சந்திரன், அக் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன், கட்சியின் உப தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இரா.துரைரட்ணம், கட்சியின் பொருளாரும் மன்னார் நகர சபையின் உறுப்பினருமான சம்பூரணம் இரட்ணசிங்கம் உட்பட கட்சியின் அமைப்பாளர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் கடந்த 40 வருடமாக ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி கடந்து வந்த பாதை தொடர்பான காணொளி காட்சிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கட்சியின் செயற்பாடுகள் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பிலும் தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர் அதீதிகளின் விசேட உரைகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது .

No comments