மன்னார் புதைகுழி? வலுக்கின்றது சந்தேகம்!


மன்னார் புதைகுழி இறுதி யுத்த காலத்தில் சரணடைந்து பேரூந்துகளில் ஏற்றிச்செல்லப்பட்டவர்களுடையதென்பதற்கான சந்தேகம் வலுத்து வருகின்றது.

முள்ளிவாய்க்காலில் சரணடைந்து படையினரால் பேரூந்துகளில் ஏற்றிச்செல்லப்பட்டவர்களது புதைகுழியாக இது இருக்கலாமென சந்தேகம் வலுத்துள்ளது.மன்னாரிற்கு அத்தகைய மூன்று பேரூந்துகள் சென்றிருந்த நிலையில் அதில் கொண்டு செல்லப்பட்டவர்களுடைய எலும்புகூட்டு எச்சங்களாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

இதனிடையே மன்னார் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எச்சங்கள் தொடர்பிலான வழக்கு மீண்டும் நாளை புதன் கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எச்சங்களின் கார்பன் பரிசோதனை அறிக்கை மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு உத்தியோகப்பூர்வமாகக் கிடைக்காமையாலேயே வழக்கு நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மன்னார் நீதவான் இ.சரவணராஜா முன்னிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

No comments