நாவாந்துறை நபர் மீண்டும் வைத்தியசாலையில்?


நாவந்துறையில் சிறுமியை கடத்த முற்பட்டார் என அப்பகுதி மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நபர் தப்பித்து சென்றிருந்ததாக சொல்லப்பட்ட நிலையில் மீண்டும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.யாழ்.போதனா வைத்தியசாலையிலிருந்து தப்பியோடியவர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சேர்ந்திருந்ததாக தற்போது சொல்லப்படுகின்றது.

தற்போது குறித்த நபர் மீண்டும் யாழ்.போதனா வைத்திய சாலையில் 24ம் விடுதியில்; பொலீஸ் பாதுகாப்பில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே இன்றைய தினம் குற்றவாளியை தப்பிக்க விட்ட பொலிஸிற்கு எதிராக நாவாந்துறை மக்கள் ஆர்ப்பாட்டமொன்றிற்கு அழைப்புவிடுத்திருந்த நிலையில் காணாமல் போன சந்தேகநபர் மீள வைத்தியசாழலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளார். 

No comments