ஐக்கிய தேசிய முன்னணிக்கு சுமந்திரன் தலைவர் ?

ஐக்கியதேசிய முன்னணி அரசாங்கத்தின் உண்மையான தலைவா் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பி னா் எம்.ஏ.சுமந்திரனே என நாடாளுமன்ற உறுப்பினா் உதய கம்மன்பில கூறியுள்ளாா்.

பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

சமஷ்டிக்கு அப்பால் சென்ற அரசியலமைப்பச்சட்டம் கொண்டு வரப்படும் என சுமந்திரன் வடக்கில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தமிழில் உரையாற்றும் போது கூறியுள்ளார்.

சமஷ்டி நாடான இந்தியாவில் மாநில அரசாங்கம் சட்டத்திற்கு விரோதமாக செயற்பட்டால், மாநில சட்டச் சபையை கலைத்து, ஜனாதிபதியின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டு வரலாம்.

எனினும் சுமந்திரன் கூறுவது போல், பார்த்தால், புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வந்தால், மாகாண சபைகளில் தலையீடு செய்ய ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்காது.

அத்துடன் ஆளுநர்களுக்கும் எந்த அதிகாரமும் இல்லை. இதன் காரணமாகவே புதிய அரசியலமைப்பச்சட்டத்தை சமஷ்டிக்கும் அப்பால் சென்ற அரசியலமைப்பு என்று சுமந்திரன் தெளிவுப்படுத்தியுள்ளார்

எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

No comments