எம்.பிக்கள் அடிதடி அறிக்கை சபாநாயகரிடம்

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கைகலப்பு தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று (22) சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.

கடந்த நவம்பர் மாதம் 15,16 மற்றும் 17 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை தொடர்பில் விசாரணை செய்வதற்கு, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறியின் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டது.

பிரதி சபாநாயகர் தலைமையிலான இக்குழுவில் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, கூட்டமைப்பின் எம்.பி. மாவை சேனாதிராஜ, ஜே.வி.பி. எம்.பி. பிமல் ரட்னாயக்க, சமல் ராஜபக்ச, சந்திரசிறி கஜதீர ஆகியோர் அங்கத்தவர்களாக இடம்பெற்றனர்.

எனினும், சமல், சந்திரசிறி கஜதீர ஆகியோர் விசாரணைகளை புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments