வைத்திருப்பது 4000:விடுவிப்பு 40 மட்டுமே?


யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்த நிலங்களில் மேலுமொரு சிறுபகுதி நீண்ட இழுபறிகளின் பின்னராக விடுவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 264 ஏக்கர் தனியார் காணிகளும் இராணுவத்தின் கீழ் இருந்த 4 பண்ணைகளுக்கு சொந்தமான 1099 ஏக்கர் அரச காணிகளையும் விடுவிப்பதுக்கான சான்றுப் பத்திரங்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்கவால் முல்லைத்தீவில்; ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

அவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகள் ஆளுநர் ஊடாக மாவட்ட செயலாளர்களிடம் கையளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மாவட்ட செயலாளர்களும் காணி விடுவிப்பு கொண்டாட்டங்களை இன்று முன்னெடுத்திருந்தனர்.

இதனிடையே வலிகாமம் வடக்கில் படையினர் வசமுள்ள 4ஆயிரம் ஏக்கரிற்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் வெறும் 40 ஏக்கர் நிலப்பரப்பு மட்டும் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments