காணிப் பிணக்கில் முதியவர் அடித்துக் கொலை - கொடிகாமத்தில் சம்பவம்

காணி பிணக்கில் அரச உத்தியோத்தர்கள் இருவரின் தாக்குதலுக்கு இலக்கான முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் கொடிகாமம் வடக்கு எழுதுமட்டுவாழில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். கொடிகாமம் வடக்கு எழுதுமாட்டுவாளைச் சேர்ந்த செல்லன் சின்னத்துரை (வயது-78) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

அதே இடத்தில் காணித்தகராறு கைகலப்பாக மாறியதில் வயோபர் மீது  அலவாங்கு பொல்லால் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவம் கடந்த 19ஆம் திகதி இடம்பெற்றது.

மட்டுவில் பகுதியை சேர்ந்த அரச உத்தியோகத்தர் இருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டனர் என்று முறைப்பாடு கிடைத்தது.

முதியவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரிஙவைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவர் மேலதிக சிகிச்சைக்காக ய யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மாற்றப்பட்டார்.

அங்கே அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி பெற்று சிகிச்சை பெற்றார். நான்கு நாள்களுக்கு முன்பே முதியவர் வீடு திரும்பினார்.

இந்த நிலையில் நேற்று மாலை அவர் திடீரென உயிரிழந்தார் என்று உறவினர்களால் அறிவிக்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த கொடிகாமம் பொலிஸார் மூன்று நாள்களின் பின்பே அரச உத்தியோகத்தர்கள் இருவரையும் கைது செய்தனர்.

எனினும் தாக்குதலுக்குள்ளான முதியவர் சுயநினைவற்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற போது சந்தேகநபர்கள் இருவரைம்  நீதிமன்றில் பிணையில் விடுவித்து பொலிஸார் உதவினர்.

No comments