சவேந்திர டி சில்வா, இலங்கை இராணுவத்தின் தலைமை அதிகாரியாம்?


இறுதிக்கட்டப் போரில், முக்கிய பங்காற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா, இலங்கை இராணுவத்தின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இலங்கை இராணுவத்தின் 53 வது தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

சவேந்திர சில்வா, இறுதிக்கட்டப் போரில் 58 ஆவது பிரிவு கட்டளை அதிகாரியாக, பணியாற்றியவர். . இறுதிக்கட்டப் போரில் நிகழ்த்தப்பட்ட மோசமான போர்க்குற்றங்களுடன் இவருக்குத் தொடர்பு இருப்பதாக, தமிழ் அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகின்றன.

அதுமாத்திரமின்றி கோத்தாபய ராஜபக்சவுக்கு நெருக்கமானவர் என்ற ரீதியிலும் அவருக்கான பதவி உயர்வுகள் கடந்த காலங்களில் மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவர் இலங்கை இராணுவத்தின் படைப் பிரிவு பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார். வெள்ளைக்கொடிகளை ஏந்தி வந்த விடுதலைப்புலிகளை சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் உதவி தூதராக நியமிக்கப்பட்டிருந்தார்.

No comments