றோ அதிகாரி ,நாலக்க சில்வா தொடர்ந்தும் சிறையில்!


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்டோரை வடக்கு, கிழக்கு பகுதிகளில் வைத்து கொலை செய்ய திட்டம் தீட்டியமை தொடர்பில் கைதாகியுள்ள றோ அதிகாரியை தொடர்ந்தும் தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை வழக்கு விசாரணையின் போது முதலாவது சந்தேகநபராக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கின்ற இந்திய பிரஜையான றோ அதிகாரியை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை வழங்குமாறும் கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முன்னததாக தைகாகியுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா மற்றும் இந்திய பிரஜை ஆகியோர் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டிருந்தனர்.

எனினும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று மன்றில் ஆஜராகவில்லை.

இதனிடையே பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா முன்வைத்துள்ள பிணை கோரிக்கை தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

தன் மீதான கொலையின் பின்னணியில் ரணில் மற்றும் சரத்பொன்சேகா இருப்பதாக மைத்திரி குற்றஞ்சாட்டிவருவது குறிப்பிடத்தக்கது. 

No comments