நியமிக்கப்பட்டனர் பாராளுமன்றத் தெரிவுக்குழு உறுப்பினர்கள்!

சிறீலங்கா நாடாளுமன்றத்தில் தெரிவுக் குழு தொடர்பான இலத்திரனியல் வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஐக்கிய தேசிய முன்னணியில் 5 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 5 உறுப்பினர்களும், மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தலா 1 உறுப்பினருமாக தெரிவிக் குழுவில் இடம்பெறுவர் எனச் சபாநாயகர் பாராளுமன்றில் அறிவித்தார்.

குறித்த வாக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

என்றாலும் ஆளும் கட்சியின் எதிர்ப்புக்கு மத்தியில் சபாநாயகரினால் தெரிவு குழு தொடர்பில் வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது

இந்நிலையில் 121 வாக்குகள் ஆதரவாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து மீண்டும் பாராளுமன்றம் எதிர்வரும் 27 ஆம் திகதி பிற்பகல் 1 மணி மீண்டும் கூடும் எனச் சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.
பாராளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்கள் நியமனம்🦂

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு:
1. தினேஷ் குணவர்தன
2. எஸ்.பி. திஸாநாயக்க
3. நிமல் சிறிபால டி சில்வா
4. மஹிந்த சமரசிங்க
5. விமல் வீரவங்ச

ஐக்கிய தேசிய முன்னணி:
1. லக்ஷ்மன் கிரியெல்ல,
2. ரவூப் ஹக்கீம்
3. மனோ கணேசன்
4. பாட்டலி சம்பிக்க ரணவக்க
5. ரிஷாட் பதியுதீன்

தமிழ் தேசிய கூட்டமைப்பு
1. மாவை சேனாதிராஜா

மக்கள் விடுதலை முன்னணி
1. விஜித ஹேரத்

No comments