நாடாளுமன்றம் கலைப்பிற்கு எதிராக உயர்நீதிமன்றில் 10 மனுக்கள் தாக்கல்


நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக 10 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் இன்று (12) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளே இவ்வாறு பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக மனுக்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக ஜனாதிபதி, பிரதமர், தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் பிரதிநிதிகள் ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

No comments