பிரதமருக்கான ஆசனத்தை மகிந்தவிடம் கொடுக்க இணக்கம்


பாராளுமன்றக் கூட்டத் தொடரின்போது, சபையில் பிரதமருக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஆசனத்தை மஹிந்த ராஜபக்ஸவுக்கு வழங்கத் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரதமராக மஹிந்த ராஜபக்ஸவின் பெயர் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளதால், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற அதிகாரிகளால் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சபாநாயகரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

No comments