ஜேவிபி,சபாநாயகர் புறக்கணிப்பென அறிவிப்பு!


முன்னாள் பிரதமர் ரணில் இன்றைய மைத்திரி சந்திப்பிற்கு சம்மதித்துள்ள நிலையில் ஜேவிபி மற்றும் சபாநாயகர் ஆகியோர் அதனை புறக்கணித்துள்ளனர்.ஏற்கனவே பேசி தீர்மானித்துவிட்டு ஆலோசனை கூட்டமென இதுநடத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ரணிலால்  அறிமுகப்படுத்தப்பட்ட தொகுதிக்கு 200 மில்லியன் வேலைத்மிட்டமான கம்பறலிய திட்டத்தினை இடைநிறுத்த மைத்திரி உத்தரவிட்டுள்ளார்.

எனினும் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் அன்றி ஏனையவற்றை செயல்படுத்த வேண்டாம் என மாவட்டச் செயலாளர்களிற்கு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனா பணிப்புரை விடுத்தார்.

இலங்கையின் 25 மாவட்டச் செயலாளர்களையும் நேற்றைய தினம் தனது மாளிகைக்கு அழைத்த அரச தலைவர் தற்போது இடம்பெறும் திட்டங கள் தொடர்பில் கேட்டறிந்து மேற்படி உத்தரவினையும் பிறப்பித்தார்.

இதன்போது அவர் மேலும் விபரம் தெரிவிக்கையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரம சிங்காவின் அமைச்சினால் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்ட கம்பறலிய திட்டத்தினை இடை நிறுத்துங்கள் . இருப்பினும் ஏற்கனவே சில திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பின் அப் பணிகளை மட்டும் முன்னெடுத்து பணியை நிறைவுறுத்துங்கள்.

அவ்வாறு எஞ்சிய பணியை முன்னெடுக்க வேண்டாம். அவற்றிற்குரிய நிதிகள் கிடைக்காதென தெரிவித்துள்ளார். 

No comments