இந்தியா ரணிலுக்கு ஆதரவளிக்க சொல்லவில்லையாம்?


இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற அரசியல் நெருக்கடியான நிலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவினதோ அல்லது மேற்கு நாடுகளினது அழுத்தம் காரணமாகவோ எந்த முடிவையும் எடுக்கவில்லை. மாறாக தமிழ் மக்களின் நலன்சார்ந்தே முடிவுகளை எடுத்துள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடியில் கூட்டமைப்பு ஒரு முடிவை எடுக்க வேண்டியிருந்தது. அதற்கமைய நாங்கள் கலந்து பேசித் தீர்மானித்துஒரு முடிவை எடுத்திருக்கின்றோம். அந்த முடிவானது இந்தியா மற்றும் மேற்கு நாடுகளின் நலன்களுக்காக அல்லது அவர்களது அழுத்தம் காணரமாக எடுக்கப்பட்ட முடிவல்ல. அது எமது மக்களின் நலன்சார்ந்து நாங்கேள எடுத்த முடிவாகும்.

இந்த நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற பிரதமர் நியமனம் அரசியலமைப்பிற்கு முரணாணது. ஆகையினால் அந்த நியமனத்தை எதிர்ப்பதற்கு முடிவு செய்திருக்கின்றோம். அதனை தெளிவாக நாம் எடுத்த தீர்மானத்தில் வெளிப்படுத்தியிருக்கின்றோம். 

ஆரசியலமைப்பிற்கு முரணாகச் செய்யப்பட்ட பிரதமர் நியமனத்தை எதிர்ப்பதெனவும்; அந்தப் பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிப்பதெனவும் தீர்மானத்திருக்கின்றோம். அதற்காக நாம் யாருக்கும் ஆதரவு என்று எந்த இடத்திலும் யாரும் குறிப்பிடவில்லை. அது ரணில் விக்கிரமசிங்கவிற்கான ஆதரவும் அல்ல.

இதே வேளை தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான முயற்சியொன்று நடைபெற்று வந்த நிலையிலையே இந்தக் குழப்பம் ஏற்பட்டிருக்கின்றது. இனி அந்த முயற்சி வெற்றி பெறுமா இல்லையா என்பதற்கப்பால் நாம் ஒரு தெளிவான,தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டியிருந்ததன் அடிப்படையிலையே இந்த முடிவை எடுத்தோம். இந்த முடிவில் வேறு தரப்பினர்களின் அழுத்தமோ அல்லது நலன்களோ இருக்கவில்லை. அது முழுக்க முழுக்க எமது மக்களின் நலன்சார்ந்தே எடுத்தது ஆகுமென சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

No comments