சாவகச்சேரி மந்துவிலில் நாவலர் கிராமம்


வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் ஆலோசணையில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் யாழ்ப்பாணம் சாவகச்சேரி மந்துவில் பகுதியில் அமைக்கப்பட்ட  நாவலர் கோட்டம் எனும் மாதிரிக் கிராமம் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

135 ஆவது மாதிரிக் கிராமமாக அமைக்கப்பட்டுள்ள மேற்படி மாதிரிக் கிராம வீடுகளை அமைச்சர் சஜித் பிரேமதாசா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு பொது மக்களிடம் உத்தியோக பூர்வமாக வழங்கி வைத்தார்.

அரசாங்கத்தின் ஏற்பாட்டில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் ஆலோசனையில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நாட்டின் பல இடங்களிலும் மாதிரிக் கிராமங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதற்கமையவே 135 ஆவது மாதிரிக் கிராமமாக சாவகச்சேரியில் நாவலர் கோட்டம் எனும் மாதிரிக் கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ் மாதிரிக் கிராமத்தை அந்த மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்றை காலை நடைபெற்றது.

இதன் போது மாதிரிக் கிராமத்திற்கான பெயர்பலகையை திரை நீக்கம் செய்து வைத்த அமைச்சர் சஜித் பிரேமதாசா இந்த கிராமத்தில் அமைக்கப்பட்ட வீடுகளையும் நாடாவெட்டித் திறந்து வைத்து மக்களிடம் கையளித்தார். இதனைத் தொடர்ந்து புதிதாக உருவாக்கப்பட்ட நாவலர் கோட்டம் கிராமத்தில் இதன் நிகழ்வுகளும் நடைபெற்றன. இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன்  மற்றும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் அரச அதிகாரிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments