அரசியலமைப்புக்கு உட்பட்டுச் செயற்படுங்கள் - ஐரோப்பிய நாடுகள் கூட்டாக அழுத்தம்


அனைத்து தரப்புகளும், சிறிலங்காவின் அரசியலமைப்புக்கு உட்பட்டுச் செயற்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம்  வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளது.

சிறிலங்காவில் நேற்று இடம்பெற்ற ஆட்சிக்கவிழ்ப்பை அடுத்து, கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுவரும், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து. ருமேனியா, பிரித்தானிய ஆகிய நாடுகளின் தூதுவர்களும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், சிறிலங்காவில் நடந்து வரும் நிகழ்வுகளை மிக நெருக்கமாக கண்காணித்து வருகிறோம். அனைத்து தரப்புகளும், முற்றிலும் சிறிலங்காவின் அரசியலமைப்புக்கு அமைய, செயற்பட வேண்டும் என்றும், வன்முறைகளில் இருந்து விலகி, நிறுவன செயல்முறையை பின்பற்றுமாறும், சுதந்திரமான அமைப்புகள் மற்றும் ஊடக சுதந்திரத்தை மதிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம் என்றும் கூறப்பட்டுள்ளது.

No comments