வாகனத்தை கோட்டை விட்ட காவல்துறை?

“கொடிகாமம் பொலிஸாரின் வாகனத்தை எடுத்துச் சென்றவர் மரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகிய நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். வாகனம் மீட்கப்பட்டுள்ளது” என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் இன்று (11) செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது.
“வாகனத்தை வீதியில் நிறுத்திவிட்டு பொலிஸார் வீடு ஒன்றுக்குள் சென்றிருந்தனர். வாகனத்தின் திறப்பு கழற்றப்படவில்லை.
அதனால் அந்தப் பகுதியால் வந்த ஒருவர் வாகனத்தை எடுத்துத் தப்பித்தார். பொலிஸார் வாகனத்தேடி நான்கு திசையும் தேடினர். கொடிகாமம் ஆலடிப் பகுதியில் மரமொன்றுடன் மோதி வாகனம் விபத்துக்குள்ளாகிய நிலையில் நின்றது.
அதனை எடுத்துச் சென்றவர் மதுபோதையிலிருந்தார். அவர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். வாகனம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது” என்று பொலிஸார் மேலும் கூறினர்.
இதேவேளை, கொடிகாமம் பாலாவிப் பகுதியில் இடம்பெறும் மணல் கடத்தலைத் தடுக்கும் நோக்கில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை அதிலிருந்து திசை திருப்பும் நோக்கில் நன்கு திட்டமிடப்பட்டு வாகனம் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments