கலகலப்பிடையே ஒரு குதூகல சுற்றுலா?


வடமாகாணசபை உள்வீட்டு குழறுபடிகளால் தள்ளாடிக்கொண்டிருக்கின்ற சூழலில் உறுப்பினர்களின் அடுத்த தொகுதியினர் இந்திய சுற்றுலாவிற்கு புறப்பட்டுள்ளனர்.இதனிடையே இந்தியாவிற்குச் செல்லும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அணியில் இருந்த எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கான இந்திய நுழைவு விசா அனுமதியை வழங்காது இந்தியத் தூதரகத்தினால் மறுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இந்தியாவின் ஐதராபாத்தில் இடம்பெறும் ஏசியா பவுண்டேசன் நிறுவனத்தின் ஏற்பாட்டிலான அனுபவப் பகிர்வு மற்றும் முன்னுதாரணங்கள் கொண்ட ஒரு வாரகாலப் பயண்தில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 11 பேர் மற்றும் அலுவலர்கள் என பயண ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்தப் பயணப் பட்டியலில் இருந்த 11 மாகாண சபை உறுப்பினர்களில் மாகாண அமைச்சர் சிவநேசன் எதிர் வரும் 18ம் திகதிய நீதிமன்ற வழக்கு காரணமாக தனது பயணத்தை இரத்துச் செய்துள்ளார்.

இதேநேரம் எஞ்சி 10 பேரில் 9 பேரிடம் அலுவலக கடவுச் சீட்டு உள்ளமையினால் பயணத்தின்போது விமான நிலையத்தில் அனுமதியை பெற முடியும். அதேநேரம் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் தற்போதுவரையில் சாதாரண கடவுச் சீட்டே உள்ளமையின் காரணமாக இப் பயணத்திற்காக இந்தியப் பயணத்திற்காக நுழைவு விசாகோரி கோரி கடந்த 4ம் திகதி யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்திற்கு விண்ணப்பித்திருந்தார்.

இந்த நிலையில் சிவாஜிலிங்கத்திற்கான விசா அனுமதி நேற்று மாலை வரையில் வழங்கப்படாத நிலையில் சிவாஜிலிங்கத்திற்கான பயண அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஏற்கனவே ஒரு தொகுதி அதிகாரிகள் ஜதரபாத் சென்று இன்று திரும்புகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments