அம்பலமான சத்தியலிங்கத்தின் பொட்டுக்கேடு?


வடக்கு மாகாணத்தில் மேற்கொண்ட போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்களை மத்திய அரசின்(கொழும்பு) தலையீட்டுடன் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் மூடி மறைத்துள்ள விடயம் அம்பலமாகியுள்ளது. 

வடக்கு மாகாணத்தின் எல்லா மாவட்டங்களிலும் போரினால் ஏற்பட்ட பாதிப்புக்களை கணக்கெடுக்கும் வேலைத்திட்டத்தினை வடக்கு மாகாண சுகாதார அமைச்சராக இருந்த சத்தியலிங்கம் மேற்கொண்டிருந்தார். இதற்காக பணியாளர்கள் மடிக்கணனிகளுடன் வீடுவீடாகச் சென்று நேரடியாக தகவல்களைத் திரட்டியிருந்தனர். இந்த செயற்பாட்டின் ஆரம்பமாக கிளிநொச்சி மாவட்டத்தையே முதலில் தேர்வு செய்து அங்கு பணிகளை ஆரம்பித்திருந்தனர். இவ்வாறு வடக்கு மாகாண சுகாதார அமைச்சு மேற்கொண்ட புள்ளி விபரத்திரட்டில் வெளியான தகவல் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

அதாவது ஏற்கனவே அரசாங்கம் போரினால் பாதிக்கப்பட்டதாக வெளியிட்ட புள்ளி விபரங்களை விட இது பன்மடங்கு அதிகமாக காட்டியிருக்கிறது. இதன் பின்னர் இந்த தகவல் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் ஊடாக கொழும்புக்கு தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறான தகவல்களின் வீரியத்தன்மையை உணர்ந்து கொண்ட கொழும்பு அந்த தகவலை வெளியில் வராதவாறு மூடி மறைக்க வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சருடன் இரகசிய உடன்படிக்கையை செய்து கொண்டிருக்கிறது. இதன்காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் திரட்டப்பட்ட தரவுகள் வெளியிடப்படாமலும் ஏனைய மாவட்டங்களில் அந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்காமலும் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் பாரிய ஊழல் மோசடியில் ஈடுபட்டிருப்பதை கொழும்பு ஊடகம் ஒன்று உறுதிப்படுத்தியுள்ளது.

No comments