பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்குப் பதிலாக உருவாக்கப்பட்டுள்ள, பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவுக்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்று அங்கீகாரம் அளித்துள்ளது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன நேற்று அமைச்சரவையில் முன்வைத்தார்.

இந்தச் சட்டரைவில் கூறப்பட்டுள்ள மூன்று விடயங்கள் தொடர்பாக அமைச்சர் விஜேதாச ராஜபக்ச எடும் எதிர்ப்பை வெளியிட்டார்.

இதனால் அமைச்சரவையில் கடுமையான வாக்குவாதங்களும் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

இறுதியில், இந்த சட்டவரைவு மீது நடத்தப்படும் குழு நிலை விவாதத்தின் போது திருத்தங்களை முன்வைப்பது என்ற இணக்கப்பாட்டின் அடிப்படையில் அமைச்சரவையின் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சிறிலங்கா அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாகவும், அனைத்துலக நியமங்களுக்கு ஏற்ப, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை உருவாக்குவதாகவும், அனைத்துலக சமூகத்திடம் வாக்குறுதி அளித்திருந்தது.

எனினும், நீண்ட காலமாக இந்தச் சட்ட வரைவை சமர்ப்பிக்கும் நடவடிக்கை இழுபறியாக இருந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#Sri Lanka #Cabinet Minister

No comments