விஜயகலா மீது நடவடிக்கை எடுக்க முடியும் - சட்டமா அதிபர் அறிவிப்பு!

முன்னாள் பிரதி அமைச்சரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரனின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் நிலையியற் கட்டளை பிரகாரம் நடவடிக்கை எடுக்க முடியும் என சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அறிவித்துள்ளார்.

முன்னாள் பிரதி அமைச்சரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரனின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் நிலையியற் கட்டளை பிரகாரம் நடவடிக்கை எடுக்க முடியும் என சட்டமா அதிபர் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அறிவித்துள்ளார்.

எனினும் சட்டமா அதிபர் அனுப்பியுள்ள அறிக்கையில் விஜயகலா மகேஸ்வரன் எம்.பியின் கருத்து அரசியலமைப்புக்கு முரணானதா? இல்லையா? என்பது தொடர்பில் எந்தவொரு குறிப்பும் இடப்படவில்லை. இதனால் குறித்த கருத்து அரசியலமைப்புக்கு முரணானதா என உடன் அறிவிக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய சட்டமா அதிபரிடம் கோரியுள்ளார்.


தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு மீள் உருவாக வேண்டும் என யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் முன்னாள் பிரதி அமைச்சரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து பெரும் பரபரப்புக்கும், எதிர்ப்புக்கும் உள்ளானது. தெற்கு அரசியல் கட்சிகள் பெரும் எதிர்ப்புகளை வெளியிட்டன. இந்த கருத்து தொடர்பில் பாராளுமன்றத்திலும் சர்ச்சையான நிலைமை ஏற்பட்டமை இங்கே நினைவூட்டத்தக்கதாகும்.


No comments