அது நானில்லை :கோத்தபாய!

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில், ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தியை, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மறுத்துள்ளார்.
மேற்படி விவகாரம் தொடர்பில், தன்னுடைய டுவிட்டர் மற்றும் பேஸ்புக் கணக்குகளில், பதிவொன்றையும் அவர் இட்டுள்ளார்.
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால், வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படும் அறிக்கையில், 2020 ஜனாதிபதி வேட்பாளராக, என்னுடைய பெயர் இருப்பதாக, சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது முற்றிலும் பொய்யானதாகும்”
“மக்களை திசைதிருப்பி, குழப்பமான அரசியல் நிலைமையொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சியாகவே, இந்தச் செய்தி அமைந்துள்ளது.  அரசியலில் குழப்பகரமான நிலைமையை ஏற்படுத்துவதற்காக ஒரு தரப்பினரால் முன்னெடுக்கப்படும் முயற்சியாகவே நான் பார்க்கின்றேன்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments