கிழக்கு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்!

கிழக்கு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்களென வடமாகாண சபையின் தவிசாளர் சி .வி .கே சிவஞானத்திடம் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

"கிழக்கிலிருந்து தலா ஒரு ரூபா வீதம் அளித்த நாளாந்த உழைப்பாளிகள், வணிகர்கள்,மாணவர்கள், முஸ்லீம் பொதுமக்கள் ஆகிய எங்கள் ஏழாயிரம் பேரினதும் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்" என கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீட மாணவர் ஒன்றியத்தினர்  வடமாகாண சபையின் தவிசாளர் சி .வி .கே சிவஞானத்திடம்   வேண்டுகோள் விடுத்துள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக தன்னிடம் அறவிடப்பட்ட ரூபா ஏழாயிரத்தையும் திருப்பி வழங்குமாறு  வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராஜா வேண்டுகோள் விடுத்திருந்தார். இது தொடர்பாக மனம் வெதும்பிய கிழக்கு மாகாண சபை மக்களிடம் சேகரித்த பணத்தை தம்மிடமிருந்து கையேற்று திரு. தவராஜாவிடம் ஒப்படைக்குமாறு திரு. சி. வி. கே. சிவஞானத்திடம் விடுத்த வேண்டுகோளின் குறிப்பிடப்பட்டுள்ளது. இந் நிதி சேகரிப்பினை வடகிழக்கின் இணைப்புப் பாலமாக நாம் கருதுவதாகவும் தமது தேசிய உணர்வினை வெளிப்படுத்துவதாகவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி ஒன்றியத் செயலர்  T. பவித்ராஜின் கையொப்பத்துடன் அனுப்பப்பட்ட இவ் வேண்டுகோளின் முழு விபரமும் பின்வருமாறு.

No comments