டென்மார்க்கில் தொடரும் தமிழின அழிப்பை வெளிப்படுத்தும் கண்காட்சி

முள்ளிவாய்க்கால் இனபடுகொலை நாள் தொடர்பாக 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களுடைய அவலங்களை வெளிப்டுத்தி  4 ஆவது நாளாக  இனவழிப்பை சர்வதேச மக்களின் கவனத்திற்குக் கொண்டுவரும் நோக்கோடு டென்மார்க் தலைநகரில் நடைபெறும் கவனயீர்ப்புக் கண்காட்சி.
இக் கண்காட்சியில் ஈழத்தமிழர்கள் மீது சிங்கள அரசால் 70 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற/ நடைபெறுகின்ற இனப்படுகொலைகளை டெனிஸ் மொழியிலும், ஆங்கிலத்திலும் விளக்கங்கள் கொடுக்கப்பட்டதோடு துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து உரையாடல்களில் செயற்பாட்டாளர்கள் ஈடுபட்டனர்.
இக் கவனயீர்ப்பு கண்காட்சி தொடர்ச்சியாக டென்மார்க் தலைநகரில் நடைபெற்று 18.05.2018 அன்று நடைபெறவுள்ள கவனயீர்ப்பு பேரணியியுடன் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது அனைவரும் இந்த பேரணியில் அணிதிரண்டு வாரீர் ...!!
பேரணி ஆரம்பமாகும் 
இடம்.Kongens Nytorv.  1050 København.K இருந்து 13.00 மணிக்கு ஆரம்பமாகும்..
நிகழ்வுகள் நடைபெறும் இடம்.
Bertal Thorvaldsens Plads
1213 Københave

No comments