கனடாவில் தமிழர்கள் தங்களின் வரலாற்று கடமையை செய்வார்களா?

தமிழர்களுக்கு தமிழீழம் என்றொரு நாடு உண்டு!
இனப்படுகொலை ஒன்று தமிழருக்கு ஈழத்தில் அரங்கேறியது!
உலகமே எங்களுக்கு நீதி கொடு!
கனடிய தமிழர் அமைப்புகள் தோள் சேர்ந்து, உலகெங்கும் பரவி வாழும் தமிழினத்தின் ஒருமித்த குரலாக, ஒட்டாவாவில் ஒருங்கமைத்து, பல் நாட்டு அறிவு சார்ந்தோர் பங்கெடுக்கும் நிகழ்வில் ஒவொரு தமிழனும் இணைந்து கொள்வது எங்கள் வரலாற்றுக் கடமை. கேட்க யாரும் நாதியற்று எம்மினம் 2009 இல் அழிக்கப்பட்ட்டபோது, கனடிய பாராளுமன்றம் முன் நின்று 30 000 பேர் வீடு வாசல் வேலையே விட்டு ஒப்பாரி வைத்தோம். அன்று நாமும் எமை நம்பி தாயகத்தில் இருந்தோரும் தோற்றுப்போனோம்.
தன் சாம்பலில் இருந்து மீள் எழுந்த பறவையாக, கடந்த 10 வருடத்துக்கு மேலாக உணர்வு பூர்வமாக ஒவ்வொரு தமிழனும் முன்னெடுத்த அரசியல் முயட்சியின் வடிவமே இந்த நிகழ்வு. எங்கு விழுந்தோமோ அங்கே இருந்து தான் எழ வேண்டும் என்பது நமக்கு ஒருவர் சொல்லி தந்திருக்கிறார்.
எந்த அரசியல்வாதிகள் எங்களை புறந்தள்ளினார்களோ, அவர்களே எம் விருந்தினராய் கலந்து கொண்டு சிறப்பிக்கும்போது, அதே ஒட்டாவா நாமும் நகரில் பெரும் திரளாக கலந்து கொண்டு எமது உரிமைப் போருக்கு உரமூடுவோம்.
உங்களுக்கான தங்குமிடம், உணவு மற்றும் போக்குவது வசதிகளுக்கு உடன் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம்: (647) 243 9396 Exit# 2

Post a Comment