வங்கி விவகாரம்:வக்காலத்து வாங்கும் அதிகாரிகள்!


ஹற்றன் நஸனல் வங்கி தலைமை தமிழ் மக்களது எதிர்ப்பினை பற்றி மௌனம் காத்துவருகின்ற நிலையில் வங்கியின் சமூக ஊடக கொள்கையை மீறியமை தொடர்பிலேயே வங்கி ஊழியர் இருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக உள்ளுர் தமிழ் அதிகாரிகள் வக்காலத்து வாங்க புறப்பட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அனுஸ்டித்தமை தொடர்பில் ஊழியர்கள் இருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டநிலையில் வங்கிச் சீருடையில் வங்கி தொடர்பற்ற நடவடிக்கைகளில் பங்கேற்கக் கூடாது என்ற அறிவுறுத்தல் வங்கியில் உள்ளது. இதனடிப்படையிலேயே குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனினும் இது சம்பளத்துடன் கூடிய இடைநிறுத்தமெனவும் வங்கிகளில் உள்ளக விசாரணைகள் இந்த வழி முறையுடன் தான் ஆரம்பிக்க வேண்டுமென்பது நியதியெனவும் வாதிடப்பட்டுள்ளது.

குறித்த ஊழியர்களிற்கு ஆதரவுப்புலம் பல தரப்புக்களிலிருந்தும் வெளிப்படுத்தப்படுவதுடன் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் பலரும்; தமது கணக்கை மூடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments