என்னால் முடிகின்றது:கூட்டமைப்பால் முடியாதா? சிவசக்தி ஆனந்தன்!

தனி மனிதனாக, தன்னால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நிபந்தனை போட முடியுமாயின், 15 எம்.பிக்களை ​கொண்டிருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், எவ்வளவு காரியங்களைச் சாதிக்க முடியும் என்று ​கேள்வியெழுப்பிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்ப்பு  தெரிவிப்பதற்கு எழுத்துமூலமான கோரிக்கை விடுத்து, எழுத்துமூல பதிலை பெற்றுக்கொண்டோம் என்றார்.
“நாடாளுமன்றத்தில் தனக்கு உரையாற்ற அனுமதி வழங்கப்படவில்லை. அதற்கான சந்தர்ப்பத்தைக் கேட்பதற்கே, கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனும், நானும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தோம் என்றார்.
இந்நிலையில், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக, வாக்களித்தமை தொடர்பில் பல்வேறான குற்றச்சாட்டுகளை எம்மீது சுமத்தி வருகின்றனர். இந்நிலையில், உண்மையான நிலைமை என்ன என்பதைப் பகிரங்கப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அரசியல் கைதிகளின் விடுதலை, மீள்குடியேற்றத்தில் உள்ள பிரச்சினைகள், காணி விடுவிப்பு, காணாமற்போனோர் விவகாரம் உள்ளிட்ட பல விடயங்களை உள்ளடக்கிய எழுத்துமூலக் கோரிக்கையொன்றை, பிரதமரிடம் முன்வைத்தோம்.
தமது கோரிக்கைகளுக்கு உடன்பட்ட ரணில் விக்கிரமசிங்கவும், எழுத்து மூலமாக தனது கையெழுத்திட்ட கடிதமொன்றை வழங்கினார் தாம் வெறுமனே, நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எழுத்துமூல உறுதிப்பாட்டின் அடிப்படையிலேயே செயற்பட்டோம்..
ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேராலும் அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனாலும், தேசிய அரசாங்கத்தின் 3 வரவு - செலவுத் திட்டங்களுக்கும் ஆதரவளிப்பதற்கான எவ்வித ஒப்பந்தத்தையும் மேற்கொள்ள முடியாது போயுள்ளது. நிபந்தனையற்ற ஆதரவை கூட்டமைப்பினர்  வழங்குவதால், எதையும் கேட்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள​னர் என்று மேலும் தெரிவித்தார்.

No comments