ஈரானுடன் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள ரஷ்யா உறுதி!!

வல்லரசு நாடுகளுடன் ஈரான் செய்துகொண்ட அணுஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் அறிவித்து உள்ளார்.

ஆனால் அந்த ஒப்பந்தத்தில் தொடர்புடைய பிற நாடுகள், ஒப்பந்தத்தை தொடரப்போவதாக கூறின.

இந்த நிலையில் ஈரானுடன் உறவை வலுப்படுத்திக்கொள்ள உறுதி பூண்டிருப்பதாக ரஷிய வெளியுறவுத்துறை துணை மந்திரி செர்கெய் ரியாப்கோவ் கூறினார்.

இதற்கிடையே ஈரானுடன் அமெரிக்கா மனிதாபிமான அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஈரான் நாட்டில் சிறைவைக்கப்பட்டு உள்ள அமெரிக்கர்களின் குடும்பத்தினர் ஜனாதிபதி டிரம்புக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

அமெரிக்க கைதிகள் விவகாரத்தில் ஈரானுடன் டிரம்ப் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த திறந்த மனதுடன் உள்ளதா என வெள்ளை மாளிகையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் வெள்ளை மாளிகை உடனடியாக பதில் ஏதும் தெரிவிக்கவில்லை.

No comments