Header Shelvazug

http://shelvazug.com/

ந.கிருஷ்ணசிங்கம் எழுத்திய முன்னை மூண்ட தீ எம் அன்னை பூபதி!


அன்னை பூபதியின்
உதரத்தில்
முன்னை மூண்ட தீயானது,
தன்னை எரித்த                                                 
எண்ணை விளக்காகி
எங்களுள் எரிந்தது.

அது இன்றும்,
கதிர்த்து முதிர்ந்த
சுதந்திரப் பிழம்பாகி...
அன்றாடம் பெருகி
மாற்றாரும்
விதந்திடும் வண்ணம்
கண்டங்கள் தாண்டியும்
சென்று பரவி
வென்றிட வேண்டும் எம்
தேசத்தை என்ற
வேக ஜாகத்தை எம்முள்
மூட்டியுள்ளது.

தம்பி திலீபன்
தாங்கிய வேள்வியில்
தம்முடல் காய்ந்து
வெந்துடல் சோர்ந்து
உயிர் ஓய்ந்தது கண்டு நாம்
கண்ணீர் விட்டோம்!
குவிகரம் சேர்த்துக்
கும்பிட்டோம்
கவிதைகளும் பாடிப் பின்…
வெம்பல் அடங்கி எம்
வேலைகளில் மூழ்கினோம்!

ஆனால் பாரும்!
அன்னை பூவதி அத்தாய்
தன்னையும்
பசித் தணலிலே திணித்து
எண்ணிறைந்த துன்பதில்
பொன் உதரம் துடிக்க
போராடிக் கிடந்து,
முப்பது தினங்களைக் கடந்து
மூப்பதின் உடல் சுருள
மன்னன் திலீபனின்
குன்றாத தியாகத்துள்
தானும் கலந்தாள்!

பகை உழுத பாதையில்
புகை நெருப்பாய்ப் பெருகிய
பாரதப் பெரும் தேசப்
பராக்கிரமம்
நேர்நின்று பார்த்து
இரசித்து சிரிக்கவே
எங்களின்
நெஞ்சங்கள் விம்மவே,

பெருத்ததோர் கூற்றின்
புலைத்தனமாய்
எங்களின் திருத்தாயை
வருத்தியே அது கொன்றதே!

தொட்டு வந்த பணி மறந்து
சொல்லரும் காம
வல் தொழில் புரிந்து,
எம் தமிழ் மக்களை
வெள் எலும்பாடி
வெட்டிப் புதைத்து,
வேட்டுவச் சிங்களத்தின்
வேலை ஆட்களாய்ச்
செயற்பட்டு,
நாளும் முட்டியே நின்ற
மூற்க இராணுவத்தை நோக்கி,

போற் தொழில் நிறுத்தி
புலிகள் எம்
பிள்ளைகளோடு பேசு
என்றுதானே எம்
பூவதித்தாய் புகன்றாள்!
மறுத்தே மண்ணின் தாயை
பசிப் போராட வைத்ததே
பாரதப் பாதகம்!

உள் நுழைந்த சினம்
உருப்பெருக்கம் எய்தியதால்
உதரம் கருகவென
உணவு மறுத்து,
உட்திணிந்த பசி நெருப்பில்
உருகி ஆன்மா ஓடவென                       
கட்டங்கட்டமாய் தாயோ தன்
உயிரை விட்டாள்!      

அன்னை ஓய்ந்த அக்கணத்தில்
திசைவெளி விருட்சங்கள்
தீப்பிடித்து எரிய…
வேய்ந்த ஒரு இலட்சம்
வெகுளிப் படையிடை புகுந்து
தோய்ந்தே குருதியாடியே
பாய்ந்த புலியின் முன்
பாரதம் நிற்கமுடியாது
வேரறுந்தே வெளிப்பட்டு…

பாராமுகச் சிங்களத்தின்
பாதகத்தை நொந்தபடி
வெந்தமனத்தோடு
விழுந்த தம் படையை விட்டு
அழுந்து வசை அவர் சுமந்தே 
அகன்ற இந்த வரலாற்றின்
தோற்றுவாயாய்
அன்னை பூவதி தாய்
அன்று அமைந்தார்!

இன்றோ…
நெடுந்துயர் காவி                                  
நொந்தெரிந்து சுருண்டு கருகி
மாய்ந்து கிடக்கும் எம்   
மண்ணைப் பார்த்து
மனம் பொறுக்காது…
உதரம் தீயாக உருப்பட
அன்னை பூவதி
அன்று அமைந்தார்!

சிதைக்கப்;பட்ட தாய்களின்,
சோதரிகளின்;, சோதரர்களின்
சொந்தங்களின்
சதைத் துண்டங்களை
திரட்டியெடுத்த தீரத்தின் உருவாய்
பகை விரட்டும் தீயாய்…
உவகைத் தாயகத்தை
மிகை உணர்வதால் மீட்க
பூ விரியும் நினைவுகளோடு
புதுயுகம் காணப் புறப்பட்ட
எமதீழ மக்கள் எமக்கு, இது
மீழ ஓரு நினைவுப் படையல்!