முள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல:கஜேந்திரகுமார்!



இனப்படுகொலையில் பங்கெடுத்தவர்கள்,அதனை ஏற்றுக்கொண்ட பங்காளிகள்,துணைபோனவர்கள் மற்றும் இனப்படுகொலையாளிகளை காப்பாற்றிக்கொண்டிருப்பவர்கள் முள்ளிவாய்க்காலில் இனஅழிப்பிற்குள்ளானவர்களிற்குள்ளானவர்களிற்கு அஞ்சலி செலுத்த அருகதையற்றவர்கள்.
இதனை யாழ்.பல்கலைக்கழக சமூகம் குறிப்பாக மாணவர் ஒன்றியம் சிந்திக்கவேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை  நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ஊடகவியலாளரொருவரால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றிற்கு பதிலளித்த அவர் முள்ளிவாய்க்கால் ஒன்றும் வெள்ளை பூசுகின்ற மையமல்லவெனவும் தெரிவித்தார்.
தமிழ் தரப்புக்கள் ஒன்றித்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்த யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அழைப்பு பற்றி எழுப்பப்பட்ட கேள்வியொன்றிற்கு பதிலளித்த அவர் நாம் யாழ்.பல்கலைக்கழக சமூகத்தை மதிக்கின்றோம்.அதனோடு இணைந்து பல சந்தர்ப்பங்களில் பயணித்துள்ளோம்.
இவ்விடயம் தொடர்பில் எவரும் எம்முடன் பேசவில்லை.நாம் மாணவர் ஒன்றியத்தை குறித்த விடயம் தொடர்பில் பேச அழைத்துள்ளோம்.ஆனால் இதுவரை எவரும் வந்திருக்கவில்லை.
இனப்படுகொலையில் பங்கெடுத்தவர்கள்,அதனை ஏற்றுக்கொண்ட பங்காளிகள்,துணைபோனவர்கள் மற்றும் இனப்படுகொலையாளிகளை காப்பாற்றிக்கொண்டிருப்பவர்கள் முள்ளிவாய்க்காலில் கால்பதிக்க அருகதையற்றவர்கள்.
கொலைகாரர்களையும் இத்தகைய தரப்பினரையும் இணைத்துக்கொண்டு அஞ்சலி செலுத்த வாருங்கள் என அழைப்பது அவர்களை தப்பவைக்கின்றதொரு முயற்சியே.
சிலர் ஒன்றித்து அஞ்சலிப்பது மக்களது விருப்பமென்கிறனர்.எங்களிற்கு எமது மக்களின் எண்ணங்கள்,நிலைப்பாடுகள் தெரியும்.அவர்கள் என்றுமே இவ்வாறானவர்களை மன்னிக்கப்போவதுமில்லை.

இத்தகைய தரப்புகளை தவிர்த்து ஏனைய தரப்புக்கள் முள்ளிவாய்க்காலில் பெர்து அஞ்சலி நிகழ்வை முன்னெடுத்தால் அதனை பரிசீலிக்க தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

No comments