ஆசியாவின் மிகப்பெரும் செல்வந்தராக அதானி!

 


இலங்கையின் வடபுலத்தில் முதலிட வருகை தந்திருந்த நிலையில் அனுர அரசால் விரப்பட்ட அதானி மீண்டும் சாதித்துள்ளார். 

அதானி குழுமத்தின்  கௌதம் அதானி, ஆசியாவின் மிகப்பெரும் செல்வந்தராக உருவெடுத்துள்ளார். 

புளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் படி, அதானியின் நிகர சொத்து மதிப்பு தற்போது 92.6 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது. அதேவேளை, பல ஆண்டுகளாக ஆசியாவின் பெரும் செல்வந்தராகத் திகழ்ந்த முகேஷ் அம்பானி இரண்டாம் இடத்திற்குப் பின் தள்ளப்பட்டுள்ளார். அம்பானியின் தற்போதைய நிகர சொத்து மதிப்பு 90.8 பில்லியன் டொலர்கள் என அந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இவர்கள் இருவரும் உலகின் பெரும் செல்வந்தர்கள் 20 பேரின் பட்டியலில் உள்ளடங்குகின்றனர். அதன்படி, உலக அளவில் அதானி 19வது இடத்திலும், அம்பானி 20வது இடத்திலும் உள்ளனர்.

No comments