வடக்குக்கான புகையிரத சேவைகள் மீண்டும் !
மஹவ முதல் ஓமந்தை வரையிலான புகையிரதப் பாதையில் மேற்கொள்ளப்பட்டு வந்த புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 09 ஆம் திகதி முதல் வடக்குக்கான புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
மஹவ மற்றும் ஓமந்தைக்கும் இடைப்பட்ட பகுதியில் ஐந்து பிரதான புகையிரதப் பாலங்களை மாற்றியமைக்கும் பணிகள் மற்றும் யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையை நவீனமயப்படுத்தும் பணிகள் காரணமாக, கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் திகதி முதல் வடக்குக்கான புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
எதிர்வரும் தமிழ் - சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, பயணிகளின் வசதி கருதி எதிர்வரும் 09 ஆம் திகதி முதல் இந்தச் சேவைகள் வழமைக்குத் திரும்பவுள்ளன.

Post a Comment