தையிட்டி திஸ்ஸ விகாரை பதிவு செய்யப்படவில்லை
தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்திருக்கும் காணியைக் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என புத்தசாசன கலாச்சார அமைச்சர் சுனில் செனவி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அமர்வில் உரையாற்றுகையிலேயே அவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
தையிட்டி திஸ்ஸ விகாரை பதிவு செய்யப்படவில்லை. வலிவடக்கு காணிகள் கையகப்படுத்துவதாக பல தகவல்கள் ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டேன்.
தையிட்டி திஸ்ஸ விகாரை காணி தொடர்பில் பதிவு சிக்கல்கள் காணப்படுகின்றன. இது தொடர்பில் பல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் இடம்பெற்று வருகின்றன. அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தையிட்டி காணி விடுவிப்பு தொடர்பிலும் நாம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டோம் என்று தெரிவித்தார்.
Post a Comment