ஆந்திர மீனவர்களிற்கு பிரச்சினையில்லை!

 






இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஆந்திர மீனவர்கள் அனைவரும் இன்று காலை காங்கேசன்துறை துறைமுகத்துல் இருந்து கடல் வழியாக இந்தியா திருப்பப்பட்டுள்ளனர்;.

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லைதாண்டிய சமயம் 4 இந்திய மீனவர்கள் கடந்த ஒகஸ்ட் 3ம் திகதி கடற்படையினரால்  கைது செய்யப்படடு  தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

தடுத்து வைக்கப்பட்ட இந்தியாவின் ஆந்திராவைச் சேர்ந்த 4 மீனவர்களும் அன்றைய தினமே தமிழ் நாட்டில் புதிதாகப் படகு கொள்முதல் செய்தமைக்கான சகல சட்டபூர்வமான ஆவணங்களை சமர்ப்பித்திருந்தனர்.அதன் அடிப்படையில் நான்கு இந்திய மீனவர்களையும் அவர்கள் பயணித்த படகுகடன் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவிற்கமைய காங்கேசன்துறை ஊடக அவர்களின் படகுடன் பயணிப்பதற்கான பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறப்பட்டு இன்று காங்கேசன்துறை துறைமுகத்துல் இருந்து கடல் வழியாக இந்தியா பயணமாகியிருந்தனர்.


No comments