தியாக தீபத்திற்கு பருத்தித்துறையில் அஞ்சலி - நாளை உண்ணாவிரத போராட்டம்
வடமராட்சி பருத்தித்துறையில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
அஞ்சலி நிகழ்வில் பொது சுடரினை மாவீரர் கப்டன் கருணாநிதியின் சகோதரரும், பருத்தித்துறை நகரசபை உறுப்பினருமான சட்டத்தரணி தி.சந்திரசேகரன் ஏற்றிவைத்ததை தொடர்ந்து மலர்மாலையை பருத்தித்துறை நகரசபை உப தவிசாளர் தேவசிகாமணி தெய்வேந்திரம் அணிவித்தார்.
தொடர்ந்து பருத்தித்துறை நகரபிதா வின்சன்டிபோல் டக்ளஸ் போல் மலரஞ்சலி செலுத்தினர்.
இதேவேளை நாளைய தினம் வெள்ளிக்கிழமை இறுதிநாள் நினைவேந்தல் நிகழ்வினை முன்னிட்டு நாளைய தினம் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்கவும் தீர்மானித்துள்ளனர்.
Post a Comment