ரணிலிற்கு கதிரையில்லை:வேகமாக மாறும் தெற்கு அரசியல்



இலங்கை ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் ரணில் கதிரையேறுவதை தடுக்க சதிகள் முன்னெடுக்கப்படுகின்றது.

ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவராக கருதப்படும் பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேராவுடன் 10 பேர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அண்மையில் விசேட இரகசிய கலந்துரையாடலை நடத்தியுள்ளது.

இவர்களில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் கடந்த காலங்களில் பொதுஜன பெரமுன அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு பின்னர் சுயேட்சை உறுப்பினர்களாக செயற்படுவதாக அறிவித்த உறுப்பினர்கள் என தெரியவந்துள்ளது.

தம்மிக்க பெரேராவுடன் தமது அரசியல் எதிர்காலம் குறித்து கலந்துரையாடிய போதிலும் கலந்துரையாடலின் பெரும்பாலான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

பொதுஜன பெரமுன கட்சியின் அடுத்தஅதிபர் வேட்பாளராக தம்மிக்க பெரேராவே போட்டியிடுவார் என அரசியல் தகவல்கள் பரவி வருகின்றன.


No comments