துருக்கியில் இஸ்ரேல் துணைத் தூதரகம் மீது தாக்குதல் : ஆயுததாரிகள் மூவர் சுட்டுக்கொலை


துருக்கியில் உள்ள இஸ்ரேல் துணைத் தூதரகம் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட மூன்று ஆயுதததாரிகள் பாதுகாப்புப் பிரிவினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. 

இத்துப்பாக்கிச் சூட்டுச்சண்டையில் காவல்துறையினர் சார்பில் இருவர் காயமடைந்தனர்.

ஆயுததாரிகள் மகிழுந்து ஒன்றில் வந்து துப்பாப்பாக்கிச் சூட்டை நடத்த முற்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தொிவித்தன.

இஸ்தான்புல் நகரில் உள்ள இஸ்ரேலிய துணைத் தூதரகம் மீதான பயங்கரவாதத் தாக்குதலை இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் கடுமையாகக் கண்டித்துள்ளது.

இந்த தாக்குதலை முறியடிப்பதில் துருக்கிய பாதுகாப்புப் படைகளின் விரைவான நடவடிக்கையை நாங்கள் பாராட்டுகிறோம் என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல்-இல் இஸ்ரேல் நாட்டின் தூதரகம் உள்ளது. இஸ்தான்புல் நகரின் பிசிக்டஸ் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் 7வது மாடியில் இஸ்ரேல் தூதரகம் அமைந்துள்ளது.

No comments