குழி பார்க்க பிந்திவரும் பிரதிநிதிகள்?
செம்மணி புதைகுழிப் பகுதியை பார்வையிடவிருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், தமது விஜயத்தை அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகும் திகதி வரை ஒத்திவைத்துள்ளனர்.
செம்மணி புதைகுழிப் பகுதியை நேரில் பார்வையிட ஐரோப்பிய ஒன்றியக்குழுவினருக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தது. எனினும், தற்போது களத்தில் அகழ்வுப் பணிகள் நடைபெறாத காரணத்தால், இன்று அவர்கள் வருகை தரவில்லை.
நீதிமன்றத்தின் அனுமதி இப்போதும்அமுலில் உள்ள நிலையில், அகழ்வுப்பணிகளின் ஆரம்பத்துடன் சர்வதேசக்குழுவின் இந்த விஜயம் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment