ஈரான் ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் இராணுவம் களமிறங்கத் தயார் - டிரம்ப் தெரிவிப்பு


கடந்த வார போர் நிறுத்தக் காலத்தைப் பயன்படுத்தி அமெரிக்க இராணுவம் தளபாடங்களை நிரப்பி வருவதாகவும், நான் உத்தரவிட்டால் ஈரான் மீதான தாக்குதல்களை மீண்டும் தொடங்க அமெரிக்கப்படைகள் தயாராக இருப்பதாகவும் டிரம்ப் கூறுகிறார்.

நாங்கள் போரை முன்னெடுக்க நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம் என்று டிரம்ப் CNBC-யிடம் கூறினார். எங்களிடம் ஏராளமான இராணுவ தளபாடங்கள் உள்ளன. அது தராளமாக இருக்கின்ன. நாங்கள் இந்தக் காலங்களைப் பயன்படுத்தி பொருட்களை மீண்டும் நிரப்பியுள்ளோம். ஈரானும் ஒருவேளை சிறிதளவு இராணுவ தளபாடங்களை மீண்டும் நிரப்பியிருக்கலாம்.

நாங்கள் புறப்படத் தயாராக இருக்கிறோம். இராணுவம் களமிறங்க மிகுந்த ஆர்வத்துடன் உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

No comments