அமைச்சருக்கு வந்திருந்த புழுகம்?
கல்வியில் சாதித்த மாணவர்களை வடக்கு ஆளுநர் முதல் சிறீதரன் நாடாளுமன்ற உறுப்பினர் என பலரும் நேரில் சந்தித்து பாராட்டிவருகின்றனர்.
ஆனால் வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரோ பிக்பாஸ் ஜனனியை சந்தித்து புகைப்படம் வெளியிட்டு மகிழ்ந்துவருகின்றார்.
நடிகை ஜனனி, அறிவிப்பாளர் ஜனனி என எவ்வாறான பாதைகளில் இருந்தாலும், அவர் எம்முடைய சமூகத்தின் ஒரு அங்கமாகவே திகழ்கிறார் என்ற உணர்வை அவருடான சந்திப்பு மேலும் உறுதிப்படுத்தியதென புழங்காகிதமடைந்துள்ளார் சந்திரசேகரன்.
அன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறியப்பட்ட ஜனனியை விட, இன்று தனது திறமைகள், சுயநம்பிக்கை மற்றும் ஆளுமையை வெளிப்படுத்தும் ஒரு முழுமையான கலைஞராக அவர் வளர்ந்து வருவது பாராட்டத்தக்கது.
அவ்வாறான ஆளுமைமிக்க ஜனனிக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.
எதிர்காலத்தில் கலை உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு உயர்ந்து, கலை உலகில் தனித்துவமான தடத்தைப் பதிக்கும் சிறந்த கலைஞராக அவர் விளங்க வேண்டும் என வாழ்த்துகிறேன எனவும் அமைச்சர் ஆசீர்வதித்துள்ளார்.


Post a Comment