மண்முனையில் சிறுவனை பலி கொடுத்து புதையல்?



மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் 16 வயது சிறுவன் ஒருவரைப் பலிகொடுத்து புதையல் தோண்ட முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதம கணக்காளர் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் உள்ளிட்ட 9 பேரையும் வரும் ஏப்ரல் 20-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மண்முனை பிரதான வீதியிலுள்ள ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில் உள்ள காணியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்த மொரட்டுவ பிரதேச செயலகத்தின் பிரதம கணக்காளர், ஓய்வுபெற்ற இராணுவ வீரர் மற்றும் மொரட்டுவ, கட்டுகஸ்தோட்டை, இங்கிரிய போன்ற பகுதிகளைச் சேர்ந்த 9 பேரைக் கைது செய்திருந்தனர். 

கைது செய்யப்பட்டவர்கள் கடந்த முதலாம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதன்போது, கும்பலால் அழைத்து வரப்பட்ட 16 வயது சிறுவனை பலிகொடுப்பதற்காகவே அழைத்து வந்ததாக கூறப்படுகின்றது; 

மண்முனைப் பகுதியானது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழர் ஆட்சிக் காலத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாக இருந்துள்ளது. 


No comments