மே தினம் தையிட்டியில்?
எதிர்வரும் மே முதலாம் திகதி அன்று தமிழ் தேசியக் கட்சிகளும், பொது அமைப்புகளும் முன்னெடுக்கும் மே தின எழுச்சி கூட்டங்கள் மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தையிட்டியில் நடத்துமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.
காணி உரிமைக்கான மக்கள் இயக்கம் ஊடகங்களின் ஊடாக பகிரங்க காரிக்கையை விடுத்துள்ளது.
எதிர்வரும் மே முதலாம் திகதி தொழிலாளர் தினமாகும்.அதேவேளை அன்றைய தினம் சித்திரை பௌர்ணமியாகவும் அமைந்துள்ளது.
அன்றைய தினத்தில் வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் தமிழ் தேசியக் கட்சிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொது அமைப்புகள் முன்னெடுக்கும் மே தினப் போராட்டங்களைத் தையிட்டி விகாரைக்கு எதிராக ஒன்றிணைத்து, ஒரு பாரிய எதிர்ப்பு நடவடிக்கையாக வெளிப்படுத்தவேண்டும்.
தையிட்டியில் காணி விடுவிப்புக்காக மேற்கொள்ளப்பட்ட நில அளவீட்டு முயற்சி ஒரு ஆச்சரியமான விடயமாகும். பொதுவாகக் காணிகள் விடுவிக்கப்படும் போது, அவை நில அளவீடு செய்யப்பட்டு மாவட்டச் செயலாளரிடம் கையளிக்கப்பட்ட பின்னரே உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும். ஆனால், இம்முறை தையிட்டியில் காணி அளவீடு செய்ய முற்பட்ட போது, மக்கள் அதனை எதிர்த்துத் தடுத்தால், 'மக்களே காணி விடுவிப்பைத் தடுத்தார்கள்' என்ற காரணத்தைக் கூறி அக்காணிகளை அபகரிப்பதே அரசாங்கத்தின் சூழ்ச்சியாக இருந்தது.
இருப்பினும், மக்கள் காணி அளவீட்டிற்குச் சம்மதித்த நிலையில் அந்தச் சூழ்ச்சி பலிக்கவில்லை. இதனால், தையிட்டி விகாரையின் விகாராதிபதி ஊடாகப் பலாலி காவல்; நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்து, காணி அளவீட்டைத் தடுக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

Post a Comment