தேனிசைச் செல்லப்பா காலமானார்


பிரபல தமிழீழ விடுதலைப் போராட்டப் பாடகர்  தேனிசை செல்லப்பா இன்று (ஏப்.28) காலமானார். தமிழீழ விடுதலைப் போராட்டம் மற்றும் தமிழ்த் தேசிய உணர்வை ஊட்டும் வகையில் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடி பாசறைப் பாணர் என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் இவர்.

தென்காசி மாவட்டத்தில், உள்ள சிங்கிலிபட்டி என்ற சிற்றூரில் பிறந்த இவர் தனது 85 ஆவது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார்.இவரது மறைவையொட்டி பல்வேறு தமிழ் அமைப்புகளும், அரசியல் தலைவர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழீழ மக்களிடையே போராட்ட எழுச்சியை உருவாக்க தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் மேடைகள் அமைத்து பாடி மக்களிடையே போராட்ட உணர்வை வளர்க்கவும் புலம்பெயர் நாடுகளில் போராட்டத்திற்கான நிதிதிரட்டும் நடவடிக்கையிலும் பங்கு வகித்தவர் இவர்.


No comments