கிவுல் ஓயா: பயணம் தொடங்கியது!



யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் 'கிவுல் ஓயா அபாயத்தின் குறியீடா?' என்ற தலைப்பிலான திறந்த கலந்துரையாடல் யாழ்.ஊடக அமையத்தின் மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.

நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், து.ரவிகரன், ப.சத்தியலிங்கம் ஆகியோரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன், தவத்திரு வேலன் சுவாமிகள், சட்டத்தரணி ஐங்கரன் குகதாசன், மற்றும் யாழ்.பல்கலைகழக கலைப்பீட பீடாதிபதி எஸ்.ரகுராம், யாழ்.பல்கலைழகமாணவர் ஒன்றிய பிரதிநிதிகள், எல்லைக் கிராமங்களை சேர்ந்த மக்கள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

கலந்துரையாடலில், கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படும் விவகாரம் மற்றும் சுற்றுசூழல் பாதிப்புகள், யானை – மனித மோதல், போன்ற பாதகமான விளைவுகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், இந்த திட்டத்தின் ஊடாக அரசாங்கம் அடைய நினைக்கும் மறைமுக இலக்குகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.




No comments