யாழில். தேநீர் அருந்திக்கொண்டிருந்த வங்கி உத்தியோகஸ்தர் உயிரிழப்பு


யாழில். உணவகம் ஒன்றில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த வங்கி உத்தியோகஸ்தர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 

பருத்தித்துறை தம்பசிட்டி பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் மதனகுமார் (வயது 39) என்பவரே உயிரிழந்துள்ளார். 

கொடிகாமம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்றைய தினம் சனிக்கிழமை தேநீர் அருந்திக்கொண்டிருந்த வேளை , திடீரென மயங்கி சரிந்துள்ளார். 

அதனை அடுத்து அங்கிருந்தவர்களை அவரை மீட்டு முச்சக்கர வண்டியில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது , அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் அறிக்கையிட்டனர். 

உயிரிழந்தவர் , ஒட்டுசுட்டான் இலங்கை வங்கி கிளையின் நிறைவேற்று தர உத்தியோகஸ்தர் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments