ஹட்டனில் தீ - 12 வீடுகள் தீக்கிரை


ஹட்டன், செனன் தோட்டத்தின் கே.எம் பிரிவில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட  தீ விபத்தில் 12 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் தோட்ட தொழிலாளர்களின் பொருட்கள் மற்றும் உடமைகள் தீக்கிரையாகியுள்ளன

தீ விபத்துக்கான காரணம் மின்சாரக் கசிவு என சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்  

No comments