Header Shelvazug

http://shelvazug.com/

சர்ச்சை பேச்சு செனட்டர் மீது முட்டை வீச்சு!

49 பேர் மரணமடைந்த நியூசிலந்துப் பள்ளிவாசல் தாக்குதல்களைப்பற்றி அஸ்திரெலிய செனட்டர் ஃப்ரேஷர் அன்னிங்  வெளியிட்ட கருத்துகள் உலகளவில் விமர்சிக்கப்பட்டது.
அந்தச் சர்ச்சைக்கு மத்தியில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் செனட்டர் மீது முட்டை ஒன்றை வீசினார்.
பதிலுக்கு செனட்டர் அவர் முகத்தில் தொடர்ச்சியாகப் பலமுறை குத்தியபோது பாதுகாப்பு அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்பட்டார்.
நியூசிலந்துப் பள்ளிவாசல் தாக்குதல்கள் முஸ்லிம் குடியேறிகள் வந்ததன் விளைவு என்று நேற்று அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments